ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது சொத்து விவரங்களைத் தரவேண்டும் – தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொண்டு நிறுவனம் விண்ணப்பம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் அவற்றைத் தாருங்கள் என தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கோரியுள்ளது. அதற்கான விண்ணப்பமும் செய்யப்பட்டுள்ளது.
சங்கத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியன தொடர்பிலான தகவல்களும் அதில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி முதல் தகவல் அறிந்து கொள்ளும் உரிமைச் சட்டம் நாட்டில் நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே - ஈ.பி...
சிரிய தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது!
மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
|
|