ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் நோர்வே பிரதமர்!
Friday, August 12th, 2016
விடுமுறையைக் கழிப்பதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்தவாரம் இலங்கை வந்திருந்த நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க், இன்று இலங்கை அரச தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு இன்றும் நாளையும் நோர்வே பிரதமர் இலங்கையின் அதிகாரபூர்வ விருந்தினராகப் பயணத்தைத் தொடரவுள்ளார். இன்று காலை நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க்கிற்கு இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
இதையடுத்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவார். இதன் பின்னர், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் நோர்வே பிரதமர் சந்திப்பார்.
இன்றுமாலை லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில், லக்ஸ்மன் கதிர்காமர் நினைவுரையை ஆற்றவுள்ள நோர்வே பிரதமர், நாளை மீரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத் திட்டத்தைப் பார்வையிடுவார். அத்துடன் காலி கோட்டைக்கும் சென்று பார்வையிடவுள்ளார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|