ஜனாதிபதி பதவியேற்று இன்று 4 வருடங்கள் பூர்த்தி!
Tuesday, January 8th, 2019ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அவர், இந்த நாட்டின் 06 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார்.
இந்நிலையில், இன்று(08) பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி களுகங்கை நீர்நிலை வேலைத்திட்ட நிறைவு நிகழ்வும், மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகரை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளன.
Related posts:
இளம் தொழில் முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி!
கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – நம்பிக்கையுடன் இருப்பதாக. அரசாங்கம் தெரிவிப்பு!
|
|