ஜனாதிபதி பணிப்புரை – பாம் எண்ணெய் இறக்குமதி முழுமையாக தடை!

Tuesday, April 6th, 2021

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றுமுதல் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு செயலாளர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய்யை விநியோகிப்பதை நிறுத்துமாறு சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் முள்தேங்காய் பயிர்ச்செய்கையை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: