ஜனாதிபதி நாளை மறுதினம் யாழ்ப்பாணம் விஜயம்!

Saturday, October 29th, 2016

கீரிமலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கப்படும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி தமையில் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அங்கு விசேட உரையாற்றவுள்ளார்.

அத்துடன் மரணமான பல்கலைக்கழக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவார் என செய்திகள் கூறுகின்றன.

Maithripala-Sirisena-wins-Sri-Lanka-presidential-election-2015

Related posts: