ஜனாதிபதி தேர்தல்: 6000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Tuesday, October 8th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக, அநுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், தபால் மூல வாக்குப் பதிவுக்காக 53,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களில் 6,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குப் பதிவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் காணப்படும் சில குறைப்பாடுகளால், குறித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக , அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: