ஜனாதிபதி தேர்தல் : வாக்கு பதிவு விபரம்!

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் இன்று பிற்பகல் 3.30 மணிவரையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், ஹம்பாந்தோட்டை, கண்டி, களுத்துறை, மாவட்டங்களில் 75 சதவீத வாக்குகளும், அம்பாறையில் 70 சதவீத வாக்குகளும், மாத்தறை மற்றும் காலியில் 72 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் 77 சதவீத வாக்குப்பதிவுகளும் நுவரெலியா, கம்பஹா மாவட்டங்களில் 75 சதவீத வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
வவுனியாவில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 73 சதவீத வாக்குகளும், குருணாகலையில் 70 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 72 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாத்தளை, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்களில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் 65 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன
Related posts:
|
|