ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா – பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு!

Saturday, April 27th, 2024

இலங்கையில்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்றையதினம் (26) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்

இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகளில் சுமுகமான விவாதங்கள் தொடர்பிலும்  இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

000

Related posts: