ஜனாதிபதி தேர்தலின்போது புதிய தீர்மானம் – ஜனாதிபதி!

Thursday, June 20th, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காதவகையில் எதிர்ரும் ஜனாதிபதி தேர்தலின்போது புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்வதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி நாட்டின் பொதுமக்கள் மற்றும் தாய்மாரின் கட்சியாக கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின்போது பெண் பிரதிநிதிகளுக்கு விசேட கடமைகள் வழங்கப்படுவதுடன், நிகழ்கால சமூக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நல்லதோர் சமூகத்தினையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமையாகும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: