ஜனாதிபதி தாய்லாந்து பயணம்!

Saturday, September 24th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள  தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

தாய்லாந்தில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது விஜயத்தின் போது தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதனிடையே ஐக்கிய நாடுகளின் 71 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றிந்த ஜனாதிபதி இன்று பிற்பகல் நாடு திரும்புகிறார்.

maithiripala-srisena-my3

Related posts: