ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் அரச நத்தார் பண்டிகை நிகழ்வு!

Monday, December 17th, 2018

2018 ஆம் ஆண்டுக்கான அரச நத்தார் பண்டிகை, யேசு பாலனின் பிறப்பும் நத்தார் கொண்டாட்டமும் எனும் தொனிப் பொருளின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று(16) மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

கரோல் பாடல்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அரச நத்தார் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டதுடன் 2018 அரச நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் அதி வணக்கத்துக்குரிய பியேரே நுயென் வேன் வோட் ஆயர், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய வின்சன்ட் பெர்ணான்டோ ஆயர், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய எம்மானுவேல் பெர்ணான்டோ ஆயர் உள்ளிட்ட திருத்தந்தையர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts: