ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

Monday, March 7th, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள், விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை அடுத்து மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், பொருளாதார நெருக்கடிகளுக்கு எடுக்க வேண்டிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடவும் ஜனாதிபதி தலைமையில் வாராந்த பொருளாதார சபையை கூட்டுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஆராயவும், அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் ஜனாதிபதி தலைமையில் வாராந்த பாதுகாப்பு சபை கூடுவதை போலாலவே தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வாராந்த தீர்மானங்களை அதில் எடுப்பதுடன், அமைச்சரவையின் அனுமதியுடன் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இந்த வாரத்தில் இருந்து ஜனாதிபதி தலைமையில் பொருளாதார சபையை கூட்டி நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்கள், மத்திய வங்கி அதிகாரிகள், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், தேவைப்படும் பட்சத்தில் பொருத்தமான நிபுணர்களை வரவழைத்து நாட்டின் நெருக்கடி நிலைமைகளை கையாளும் விதம் குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: