ஜனாதிபதி தலைமையில் கலைஞர்கள் கலந்துரையாடல்!
Saturday, October 15th, 2016
நாட்டின் தேசிய அடையாளத்தை பாதுகாத்து கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திரைப்படம், தொலைக்காட்சி, மேடை நாடகம், இசை ஆகிய துறைகளை பிரதிநிதிதுவப்பத்தும் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் தொலைக்காட்சிகள் ஊடாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது பற்றி கவனம் செலுத்தப்பட்டது
வெளிநாட்டு நாடகங்களினால் உள்நாட்டு நாடகத்துறை எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய திரைப்பட துறை, தொலைக்காட்சி நாடகம், இலக்கியம் ஆகிய துறைகளில் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி ஜனாதிபதிக்கு கலைஞர்கள் விளக்கம் அளித்தார்கள். இந்த விடயங்கள் பற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். கலைஞர்கள் தொடர்பான யோசனைகளும் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
Related posts:
|
|