ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு!

Thursday, March 10th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டிற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாடு தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், சர்வக்கட்சி மாநாட்டினை கூட்டுமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையிலேயே எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாட்டினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: