ஜனாதிபதி செயலாளருக்கு புதிய பதவி!

Saturday, July 7th, 2018

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு முன்னணி நாடொன்றில் தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோ, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி இராஜினாமா செய்யப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இந்த அறிவித்தலுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி செயலாளராக வருவதற்கு சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரிகள் பலரின் பெயர்கள் தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் கடந்த 2017 ஜூலை 01 ஆம் திகதி ஒஸ்டின் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: