ஜனாதிபதி செயலணியில் யாழ். பல்கலையின் துணைவேந்தர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம்!

Thursday, September 24th, 2020

இலங்கை கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானியில் அமைச்சுக்களுக்கும், இராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் 22ஆம் திகதிமுதல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நியமனம் செய்யப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: