ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் – அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் பதில் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்து!

Thursday, September 21st, 2023

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன்  தொடர்புடையவை அல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான முயற்சி எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: