ஜனாதிபதி – சிமோநெட்டா சொமருகா சந்திப்பு!

Tuesday, August 7th, 2018

இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு விருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

முன்னர் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அத்துடன் உள்துறை அமைச்சருடனான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றையும் அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

Related posts: