ஜனாதிபதி கோட்பய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!

Tuesday, November 24th, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

யுத்தத்தின் பின் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைத்து வந்த செயற்பாட்டாளர்களான இவர்கள் இருவரும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து அந்த விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் சாட்சியம் ஒன்றினை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: