ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையே தொலைபேசியில் உரையாடல்!

Friday, May 8th, 2020

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ள்ஸ் ஓ பிரையன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தொலைபேசியல் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாக தெரிவிகக்ப்படுகின்றது.

இதனை அமெரிக்காவின் வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா – இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்புமானது நீண்ட வரலாற்றைக் கொண்டமைந்தது என்றும் ஓ பிரையன் இதன்போது ஜனாதிபதி கோட்டாபயவிடம் உறுதிப்படுத்தினார்.

அத்துடன் இந்த உரையாடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முயற்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடியதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பகுதியாகும் என்றும் ஓ பிரையன் இந்த உரையாடலின்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கை மக்களிற்கு செயற்கை சுவாசக்கருவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனதிபதி முன்வைந்துள்ளதாக ஓ பிரையன் இந்த தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts: