ஜனாதிபதி கோட்டாபய மீதான நம்பிக்கையே பாரிய வெற்றிக்கு காரணம் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டு!

Saturday, August 8th, 2020

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வேலைத்திட்டங்கள் குறித்த மக்களின் நம்பிக்கையின் ஊடாகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றி  கிடைக்கப்பெற்றுள்ளது  அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் தலைமையகதத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் – “கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கடந்த 7 மாதங்களில் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுத்த விடயங்களின் முடிவுகளின் ஊடாக மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டமைதான் இந்த பாரிய வெற்றியாகும். இந்த முடிவுகளில் முழுமையாக திருப்தியடைவதோடு இதனை ஒரு சவாலாக பார்க்கின்றோம்.

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக முழுமையான அதிகாரத்தை எங்களது கட்சிக்கும் எங்களது அரசாங்கத்திற்கும் மக்கள் வழங்கியுள்ளார்கள்.

எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது எமது கட்சிக்கு 3 இல் 2 பெரும்பான்மை கிடைத்துள்ளது. அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்யக்கூடிய அதிகாரம் எமது அரசாங்கத்திற்கு காணப்படுகிறது.”

இதேவேளை பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாமை குறித்து வருத்தமடைவதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா தொடர்ச்சியாக அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இன்று அரசாங்கமல்ல பலமான எதிர்க்கட்சியொன்றைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை அந்த அணியினருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: