ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றியது நான் தான் – நாமல் குமார !

Tuesday, September 15th, 2020

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தில் இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார தெரிவித்துள்ளார்.

அன்று தான் வெளியிட்ட தகவல்கள் காரணமாக தற்போது கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகவும் இது சம்பந்தமாக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச பாதுகாப்புக்கு மிகவும் பலவீனமாக இருந்தது எனவும் இதன் காரணமாகவே ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தை கூட தன்னால் வெளியிட முடிந்தது எனவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியும். ஆனாலும் மிக முக்கிய தகவலை வெளியிட்ட தனக்கு இதுவரை பாதுகாப்பு கிடைக்கவில்லை எனவும் இலங்கையின் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளே இதற்கு காரணம் எனவும் நாமல் குமார மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: