ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலர் சந்திப்பு – ஆரோக்கியமான முறையில் இடம்பெற்றதாக ஜனாதிபததி பிரிவு சுட்டிக்காட்டு!

Tuesday, October 5th, 2021

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆரோக்கியமான முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை நேற்று (04) சந்தித்திருந்தார்.

அத்துடன், தமிழ் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த விஜயத்தின்போது சந்தித்திருந்ததுடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கும் நேரில் சென்றிரந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: