ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராய்வு!
Monday, March 28th, 2022இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர், கொழும்பில் இடம்பெற்றுவரும் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்தநிலையிலேயே அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் இந்தியா, இலங்கைக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர், இதன்போது உறுதிமொழி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|