ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் 228 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு – யாழ் சிறைச்சாலையிலிருந்தும் ஐவருக்கு விடுதலை!

Thursday, May 7th, 2020

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் புரிந்தோர், 65 வயதை விட அதிகமானவர்கள், அபராதம் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவித்த கைதிகள் போன்றோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்துவந்த 5 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அவர்களில் ஒருவருக்கு பிறிதொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாதுள்ளதால் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் பெரும் குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு பொது ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்படுவது வழமை. அதன்படி, சிறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அத்துடன் இன்று விடுதலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக சிறைச்சாலை வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: