ஜனாதிபதி கோட்டபயவின் தலைமையின் கீழ் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பாக செயற்பட்டுள்ளது – சர்வதேச வர்த்தக சம்மேளனம் தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதாரம் சவாலானநிலையில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாப்பாக மீள ஆரமபிக்கும் ஜனாதிபதியின் முயற்சிகளிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு உற்பத்திக்கான முக்கிய பகுதிகளை தொடர்ந்தும் முடக்கிவைத்திருப்பது வர்த்தகங்களுக்கும், அனைத்து துறைகளிற்கும், மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் நாடு சிறப்பாக செயற்பட்டுள்ளது எனவும் சர்வதேச வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முழுநாட்டையோ அல்லது முழு நகரத்தையோ மாவட்டத்தையோ முடக்குவதை விட பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தனிமைப்படுத்துவதே விவேகமான நடவடிக்கையாக அமையும் எனவும் சர்வதேச வர்த்தக சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|