ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Saturday, April 30th, 2022பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் தான் அதனையும் ஏற்க தயார் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் புதிய அமைச்சரவையை உருவாக்கவும் இணங்கியுள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊழலில் இந்தியாவை முந்தியது இலங்கை - ட்ரான்ஸ்பரன்சி இன்ரநஷனல்!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். - மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அ...
|
|