ஜனாதிபதி ஈரான் விஜயம்!

Saturday, May 12th, 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று முற்பகல் ஈரான் நோக்கி பயணமானார்.

ஈரான் ஜனாதிபதி ஹசான் ரவுஹானியின் விஷேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு செல்கிறார்.

குறித்த விஜயத்தின் போது இலங்கை ஈரானுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை விஸ்தரித்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரான் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கிடையேயான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இதன்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தி கொள்வதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: