ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் வெளிவிவகார அமைச்சர்

Wednesday, August 2nd, 2017

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஆஜராகவுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க வசித்ததாக கூறப்படும் மொனார்க் ரெசிடன்சி வீட்டுத் தொகுதிக்கு வழங்கப்பட்ட வாடகைப்பணம், ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கு இடையிலான தொடர்பு, மத்திய வங்கி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு ரவி கருணாநாயக்க இன்று பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்கனவே இரண்டுமுறை சாட்சியமளிக்க முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் இன்றையதினம் அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று  ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரவி கருணாநாயக்க ஆஜராகவுள்ளார்.

Related posts: