ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

Thursday, April 27th, 2017

திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இது குறித்த கடிதம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இம் மாதம் 27ஆம் திகதியோடு நிறைவடையவிருந்த திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக பரிட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம், எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts: