ஜனாதிபதி அவுஸ்திரேலியா விஜயம்

உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த முதலாவது அழைப்பை ஏற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அவுஸ்திரேலியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி அவுஸ்திரேலிய முதலீடுகளை கவரும் நோக்கில் அவுஸ்திரேலிய விஜயத்தை மேற்கொள்வதாகவும் இதன்மூலம் இலங்கைக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் வகையில் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கமும் உள்ளதாகவும் இதற்குரிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் என தெரிவிக்கப்படுகின்றது
கடந்த இரு வருடங்களில் இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளில் துரித வளர்ச்சி ஏற்பட்டது. பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பு வலுவடைந்தது. கப்பல் போக்குவரத்து மாத்திரமின்றி ஆட்கடத்தலை தடுக்கும் முயற்சிகளிலும் இரு நாடுகளும் நெருங்கி பணியாற்றிவருகிள்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயத்தஜற்கு முன்னர், 1954ஆம் ஆண்டு சேர் ஜோன் கொத்தலாவல இலங்கையின் பிரதமராக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கையின் இராஜ்ஜிய தலைவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியா விடுத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|