ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

Saturday, May 1st, 2021

அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மற்றும் நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 02 வார காலப்பகுதியில், ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்பூட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் பின்வரும் தொலைபேசி / தொலைநகல் எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 0114354550 அல்லது 0112354550 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது  0112348855 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவையும் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தை 0112338073 தொலைபேசி  எண் ஊடாகவும் ஜனாதிபதி நிதியத்தை 0112354354 என்ற தொலைபேசி இலக்கமூடாகவும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: