ஜனாதிபதி – அரச வைத்திய சங்க பிரதிநிதிகள் இன்று சந்திப்பு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் இன்றைய சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் கல்வி தொடர்பிலான காரணிகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய உள்ளனர். குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சில தீர்மானம் எடுப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
Related posts:
5 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண உதவி வழங்கிய பங்களாதேஷ்!
தொழு நோயையும் விரைவில் குணப்படுத்த முடியும் – வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு!
பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்ப...
|
|