ஜனாதிபதி  அதிரடி முடிவு: அதி முக்கிய பணிப்பாளர் சபைகள் கலைப்பு!

Thursday, October 18th, 2018

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பணிப்பாளர் சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பதவியும் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: