ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினால் முதலில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 20th, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செய்திச்சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஜனாதிபதியிடமே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: