ஜனாதிபதியை பாராட்டும் மார்ச் 12 இயக்கம்!

Friday, December 6th, 2019

பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதியால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டக் கூடியதாய் உள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பதவியேற்ற பின்னர் இதுவரை ஜனாதிபதி எடுத்த சில நடவடிக்கைகள் தொடர்பில் மார்ச் 12 இயக்கம் மதிப்பீடு செய்துள்ளது.

விசேடமாக அமைச்சரவையை 16 ஆக குறைத்தமை, சமீபத்திய வரலாற்றில் யாரும் செய்யாத விடயம்.

அரசியல்வாதி இல்லாத ஒருவர் அரச தலைவராக நியமிக்கப்பட்டமையின் ஊடாக இந்த நிலை ஏற்பட்டதாக நாம் நம்புகின்றோம். அது தொடர்பில் நாம் சாதகமான எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளோம்.

ஏனைய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பிரச்சினை உள்ளது. பலருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், கடந்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலின் பின்னர் இவர்கள் தொடர்பில் தௌிவான தீர்வொன்றை எடுப்பார் என நாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Related posts: