ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Saturday, February 11th, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் அரச மருத்துவ அதிகாரிகள் இன்று சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று  காலை 9 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திக்கவுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் சாதகமான முறையில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

45707

Related posts: