ஜனாதிபதியுடன் பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு – கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, December 15th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளை சார்ந்த 50 பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனில் இருந்து விடுபட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பி கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜப்பான்-இலங்கை உறவுகளின் 70 வருடங்களை முன்னிட்டு இன்று (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: