ஜனாதிபதியுடன் புதிய தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் சந்திப்பு!

Tuesday, November 15th, 2016

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் நேற்று (14) இடம்பெற்றது. இலங்கைக்கென நியமிக்கப்பட்டுள்ள உக்ரேன், பூட்டான், எதியோப்பியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் தென்னாபிரிக்கா மற்றும் சீசெல்ஸ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை இதன்போது ஜனாதிபதியிடம் கையளித்தனர். இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஸ த சில்வா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

32600ac5a6206dbe488551368c3c485f_XL

Related posts: