ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Wednesday, March 16th, 2022தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு, காணி விடுவிப்பு மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களை மையப்படுத்தி நேற்றையதினம் இடம்பெறவிருந்த சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூட்டமைப்புடனான சந்திப்பிற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையிலும், அரசியல் கட்சி என்ற ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|