ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில்: நிலைமைகள் தொடர்பில் தீவிர ஆலோசனை!

Friday, April 17th, 2020

கோரோனா தொற்று பரவல் உள்ள பகுதியாக இனங்காணப்பட்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வருகை தந்திருந்தார்.

இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலிக்கு வந்தடைந்த பாதுகாப்பு செயலர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் துறைசார் தரப்பின பிரச்சினைகள் தொடர்பில்ர்களை சந்தித்து ஆராய்ந்தறிந்துகொண்டுள்ளார்

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இவ் விஜயத்தின் போது பாதுகாப்பு செயலருடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸூம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்ககது..

Related posts: