ஜனாதிபதியின் முக்கிய கோரிக்கை!

Friday, November 22nd, 2019

ஜனாதிபதியின் தீா்மானங்கள் என கூறி பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றதாகவும், அந்த போலியான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் , ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ச வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அனைத்து முடிவுகளும் ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அல்லது தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமாக மட்டுமே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Related posts: