ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் இன்று விடுதலை!

74 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் இன்றையதினம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அபராதம் செலுத்தாததற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேல் அனுபவித்தவர்கள், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி 20 பேர் மஹர சிறையிலிருந்தும் 18 பேர் கேகாலை சிறைச்சாலையிலிருந்தும் 17 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் 13 பேர் களுத்துறை சிறைச்சாலையிலிருந்தும்11 போகம்பர சிறைச்சாலையிலிருந்தும் 11 பேர் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தும் வாரியப்பொல சிறைச்சாலை யில் இருந்து 10 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|