ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதியினால் நிதி உதவி வழங்கிவைப்பு!
Saturday, August 7th, 2021புலிகள் அமைப்பில் செயற்பட்டு அரசாங்கத்திடம் சரணடைந்து நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் புலி போராளிகளுக்கு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் உதவித்திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் 15 முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இவ் உதவித் திட்டம் வழங்கி வைக்கப்படுள்ளது.
உதவித்தட்டம் வழங்கும் நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள் யாழ் இராணுவ படைப்பிரிவுகளின் தளபதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேளேளை இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
1992 ஓகஸ்ட் 8 ஆம் திகதி இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கஜபா படையணியின் ஸ்தாபகர் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|