ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!

Saturday, June 18th, 2016

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் மத்திய வங்கி ஆளுனர் பதவி தொடர்பில் கொண்டிருந்த ஆரம்ப நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.

அர்ஜூன் மகேந்திரனை மீளவும் பதவியில் அமர்த்தக் கூடாது என வலியுறுத்தி சிவில் அமைப்புக்களினால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருந்த போராட்டம் எதிர்வரும் 21 மற்றம் 23ம் திகதிகளில் திட்டமிட்டவாறு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பிலான சர்ச்சை எழுந்த காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அர்ஜூன் மகேந்திரன் பதவியை இராஜினாமா செய்வது பொருத்தமானது என கூறியிருந்தார்.

Related posts: