ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பதிவு செய்யும் – பான் கீ மூன்!

Friday, December 23rd, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் தலைமைத்துவத்தில் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார துறைகள் சார்ந்த முன்னேற்றத்தை பதவி விலகிச் செல்லும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.

பதவி விலகிச் செல்லும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளளார்.

இதன் போதே செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாறு பாராட்டினார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார துறைகள் சார்ந்த முன்னேற்றத்தை ஐ.நா செயலாளர் நாயகம் பாராட்டிப் பேசியிருக்கிறார். அத்துடன் நல்லிணக்க நடைமுறையில் இலங்கை காட்டும் அர்ப்பணிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பதிவு செய்யும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த உரையாடலின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, பதவி விலகிச் செல்லும் செயலாளர் நாயகம் சகல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் நன்றி தெரிவித்தார்.

45c6244c2cef8ef091e81e9aa9f70840_XL

Related posts: