ஜனாதிபதியின் கீழ் மேலும் இரண்டு நிறுவனங்கள் – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு கீழ் மேலும் இரண்டு நிறுவனங்களை கொண்டுவந்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களையே ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருந்தி செயலணி திணைக்களம் ஆகிய இரண்டுமே இவ்வாறு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்துள்ள ஜனாதிபதி செயலகம், இதுதொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிட்டுள்ளது.

பொலிஸ்துறையில் ஆகக்கூடுதலான அர்ப்பணிப்பை செய்வதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இடமளிக்கும் வகையிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: