ஜனாதிபதியின் உயிருக்கு அச்சறுத்தல் – நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா

Sunday, May 8th, 2016

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கே பாரிய உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். மே தின கூட்டத்துக்கு கட்சி உறுப்பினர்களை அழைத்து வர முடியாது என கூறிய சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களை அவர் இதன்போது குற்றம் சுமத்தினார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பது அசைக்க முடியாத கட்சி என நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொகுதி அமைப்பாளர்களே ஒரு வருட காலமாக மக்களை சிக்கல்களுக்கு உள்ளாக்கியதாகவும் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts: