ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!
Thursday, April 6th, 2023உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் புது வருடத்திற்கு முன்னர் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் பிற்போவதற்கான பொறுப்பை பசில் ஏற்க வேண்டும் - அமைச்சர் பைசர்!
அதிவேக நெடுஞ்சாலையில் விசேட சுற்றிவளைப்பு!
புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக...
|
|