ஜனாதிபதியிடம் சைட்டம் குறித்த தீர்வுத் திட்டம் கையளிப்பு!

Wednesday, February 14th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து தொகுக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தினை கையளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை குறித்த சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் சைட்டம் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வைத்திய பட்டத்தினை பெறக்கூடிய வகையில் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அநேகமான தரப்பினர் உடன்பட்டிருப்பதாகவும் குறிப்பாணை போன்ற வடிவில் ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts: